கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த முறைகேடுகள் பற்றிய தகவல்கள் உட்பட அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, இனிமேல் பைஸர் தடுப்பூசி இராணுவத்தின் தலைமையில் மட்டுமே ஏற்றப்படும் என்று அவர் கூறினார்.
சரியான நடைமுறைக்கு வெளியே, தடுப்பூசி பெறத் தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் பைஸர் தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
Leave a comment