WhatsApp Image 2021 09 02 at 13.37.48
செய்திகள்இலங்கை

விசாரணையில் சிக்கியது ஆபாச காணொலி ஜோடி!!

Share

விசாரணையில் சிக்கியது ஆபாச காணொலி ஜோடி!!

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இது போன்ற வீடியோக்களைத் தயாரித்து, விற்பனை செய்தமையும் தெரிய வந்துள்ளது.

குறித்த காணொலியில் அழகுக்கலை நிபுணரான இளம்பெண்ணொருவரே தோன்றுகிறார். அந்த பெண்ணின் ஏனைய வீடியோக்களுடன் தொடர்புடைய ஆணே காணொலியில் உள்ளவர்.

இந்த ஜோடி ஏற்கனவே பல ஆபாச வீடியோக்களை தயாரித்துள்ளனர். வெளிநாட்டு ஆபாச தளங்களுக்கு பொருத்தமான வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த வீடியோக்களின் பார்வையாளர் எண்ணிக்கைக்கு பொருத்தமான கட்டணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இலங்கை சமூக ஊடங்களில் அந்த வீடியோ வெளியானது, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கமுடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கினறனர்.

இந்த ஜோடி ஏற்கனவே தயாரித்த பல வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிட்ட பஹந்துடாவ வீடியோ தான் அதிகமாக வைரலாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ, அழகுக்கலை பெண்ணுக்கு சொந்தமான ஒரு கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த பெண்ணை சிஐடியினர் கண்டுபிடிக்க இந்த கணக்கே உதவியுள்ளது.

இலங்கையின் சட்டத்தின்படி, ஆபாச வீடியோக்களை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த ஆபாச ஜோடி கைதுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...