Flood
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தற்காலிக குடிசைகளில் வாழ்ந்த மக்களின் அவலநிலை!

Share

நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிக குடிசைகளில் இருந்த மக்கள், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக,தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி – பூநகரி, இரணைதீவில் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக, புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

02 ஆண்டுகளுக்கு முன் இரணைதீவில் குடியேறிய குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வந்தனர்.

தற்போதைய கடும் மழையினால் குடிசைகளில் வசிக்க முடியாத நிலையில் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, அட்டைப் பண்ணையில் காவல் புரிந்தவர்கள், கடற் சீற்றம் காரணமாக, தமது உபகரணங்களுடன் இரணைதீவுக்கு திரும்பி உள்ளனர் எனவும் இரணைதீவில் உள்ள மக்களுக்கு மழை கால இடர் உதவிகள் தேவைப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...