உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த நிலையில் இன்றைக்கும் சில இடங்களில் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடவுள்களை மகிழ்விக்க வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது, நாய்க்கு திருமணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரங்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மழைவேண்டி மழைக்கடவுளுக்கு பூசை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பூசையில் இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பூசை செய்யபட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பனியா எனும் கிராமத்திலுள்ள மக்கள் 6 சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பூஜை நடத்தியுள்ளனர், இந்தத் தகவலை அறிந்த பொலிஸார் அங்கு வந்த நிலையில் மழைக்காக சடங்கு செய்கிறோம் என விளக்கம் அளித்துள்ளனர்.
“இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுடைய நம்பிக்கை அவ்வாறு காணப்படுகிறது. விழிப்புணர்வு பெறாத வரை ஒன்றுமே செய்ய முடியாது’’ என்று அங்கு வந்த பொலிஸார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள இந்த சம்பவம் தற்போது விவாதத்துக்கு விவாதத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment