பதுளை ஹாலிஎல அந்துட்டுவாவெல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குயின்ஸ்டவுன் தோட்டத்தின் அருகிலுள்ள பாடசாலைக்கருகில் உள்ள மரம் ஒன்றில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் தோன்றியுள்ளது.
இந்த மரவேரில் தோன்றியுள்ள பிள்ளையாரை வழிபட சிங்கள மக்களும் வெளியிடங்களிலிருந்து வரும் பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மரம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அழகுக்காக வளர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று சுயம்பாக தோன்றிய பிள்ளையாரின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வூர் மக்களால் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிள்ளையாரை பூமரத்து பிள்ளையார் என பெயர்சூட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது இருவேளைகள் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 40 வருட காலமாக இது போன்ற அதிசயத்தை வாழ்நாளில் கண்ட முதல் தடவை இது எனவும், இம் மரத்தைச் சுற்றியுள்ள பல வேர்ப்பகுதிகளில் யானையின் தலைப்பகுதி தும்பிக்கை போன்ற வடிவங்கள் அமையப்பெற்று காட்சியளிக்கிறது எனவும், இது ஒரு கலியுக அற்புதம் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a comment