rohitha
செய்திகள்அரசியல்இலங்கை

விருப்பம் இல்லையெனில் விவகாரத்தே சிறந்தது! – பங்காளிகளுக்குபெரமுன பதிலடி

Share

” திருமண பந்தத்தில் விருப்பம் இல்லையெனில் விவகாரத்து பெறவேண்டும். அதேபோல அரசில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் வெளியேறுவதே பொருத்தமாக அமையும்.”

இவ்வாறு பங்காளிக் கட்சிகளுக்கு கடும்தொனியில் பதிலடி கொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச பங்காளிக்கட்சிகளால்  நேற்று  ‘மக்கள் பேரவை’ கூட்டம் நடத்தப்பட்டது. இதன்போது மொட்டுக் கட்சியின் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித அபேகுனவர்தன பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” கூட்டணி அரசியலில் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். அரசுக்குள் ஒன்றையும், வெளியில் வேறொன்றையும் பேசக்கூடாது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் பிரதான கட்சி. நாய்தான் வாலை ஆட்ட வேண்டும். வாலால் நாயை ஆட்டுவிக்கமுடியாது. திருமணம் பிடிக்கவில்லையெனில் விவகாரத்து பெறவேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...