நாட்டின் தென்பகுதியில் 9 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு ஒரு கழிவறை மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
தென்பகுதியில் கழிவறையின்றி சிரமப்படும் குடும்பங்களுக்கு கழிவறை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக பெருந்தொகையான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இருப்பினும் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை என்ற தகவல்களே இப்போது வெளியாகியுள்ளன.
தென் மாகாணத்தில் 493 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியினை ஏற்படுத்தும் விதமாக 9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 9 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு ஒருயொரு கழிவறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
இவ்விடயமானது தேசிய கணக்காய்வு செயலகம் 2020 ஆம் ஆண்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.
கழிவறையின்றி சிரமங்களை எதிர்கொள்ளும் 493 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 246 பேருக்காக மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் கழிவறை கட்டுவதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவே தற்போது விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
#SrilankaNews

