Married
செய்திகள்இந்தியா

65 வயதில் காதலியைக் கரம்பிடித்த முதியவர்: 35 ஆண்டுகளிற்குப் பின் சக்ஸஸ் ஆனது காதல்

Share

கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக் கரம்பிடித்துள்ளார்.

மைசூர் நகரிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்த 65 வயதான சிக்கண்ணா என்பவரும் ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரிலும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜெயம்மா, வீட்டில் பார்த்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுள்ளார்.

ஆனால், ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டார்.

Married 01

காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் பிறந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் வசித்து வந்த சிக்கண்ணாவுக்கு, சமீபத்தில் தான் ஜெயம்மா தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம் மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

காதலிக்காக 35 வருடம் காத்திருந்த இவரது காதல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...