யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
63 வயதுடைய கோப்பாய் மத்தியைச் சேர்ந்த சின்னத்தம்பி குணராசா என்ற முதியவரே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது வாகனம் ஏறியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் , வாகனம் உட்பட வாகனச் சாரதியும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment