இந்தியாவில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 740 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 என பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23 ஆயிரத்து 70 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான 2 லட்சத்து 36 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 248 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 375 ஆக உயர்வடைந்துள்ளது.
Leave a comment