bakery
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

யாழில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை! – வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம்

Share

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்

பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல் இன்று வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்,

யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள்

எனினும் தமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். எனினும் அவர்கள் ஒரு காரணத்தை கூறினர் எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் உற்பத்தி அளவினை குறைக்கவுள்ளோம்

பிறீமா நிறுவனம் தற்காலிகமாக யாழிற்கு வழங்கும் மாவின் அளவை குறைக்க உள்ளது அத்தோடு எதிர்வரும் நாட்களில் இன்னும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி நாம் செயற்படுகிறோம்

எனினும் தற்போதுள்ள நிலையில் பேக்கரி உற்பத்தியை குறைக்க உள்ளோம் எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு தெரிவிக்கவுள்ளோம்

எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்தில் பேக்கரிஉற்பத்தி பொருட்களின் அளவினை குறைக்க உள்ளோம்

மாவட்ட அரசாங்க பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம்

எனினும் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுவது போல பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு மா விநியோகிக்கப்படுமாக இருந்தால் வழமைபோல் உற்பத்திப் பொருட்களை மேற்கொள்ள முடியும்

மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றது

எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

வெதுப்பகங்கள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இடர் நிலையிலும் பேக்கரி உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபர் உடனடியாக நமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கான உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம் ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...