விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்பதற்கு தயார் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உரத் தட்டுப்பாட்டு விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.
இவ்வாரம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இதற்காக எதிரணி உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டப்படலாம். அதன்பிறகு நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.
இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பில் அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் வினவியபோது,
” விவசாயிகளுக்காக அல்ல அரசியல் செய்வதற்காகவே எதிரணி இவ்வாறு செயற்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம்.” – என்றனர்.
#SriLankaNews
Leave a comment