mahinda 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தை பாதுகாக்க ஊடகங்களால் முடியாது – பிரதமர்

Share

அரசாங்கம் ஒன்றை ஊடகங்களால் உருவாக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க இயலாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் அதனை அதிகாரத்தில் அமர்த்தவுமே ஊடகங்களால் முடியும். ஆனால் அவ் அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள ஆளும் கட்சியினால் மட்டுமே இயலும் என அவர் தெரிவித்தார்.

அராசாங்கத்தை ஊடகங்கள் பாதுகாக்க எண்ணினால் அதற்கு பாரியளவு காப்புறுதி தொகை வழங்க நேரிடும். ஊடகங்கள் இவ்விடயத்தை புரிந்து கொண்ட போதிலும் எம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் உரையாற்றிய பிரதமர்,

தொழில் ரீதியாக நான் அதிகம் ஊடகவியலாளர்களுடன் பழகியுள்ளேன். ஊடகங்களுக்கு மறைக்கப்படுகின்ற விடயங்களை அறிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

இன்று நாடாளுமன்ற விவாதங்கள் திறந்த நிலையில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. ஆனால் யாரும் அதனை பார்ப்பதில்லை.

ஊடகவியலாளர்கள் அமைச்சரவை கூட்டங்களுக்கு மாத்திரமே செல்வதில்லை. அதனால் அமைச்சரவை சார்ந்து பலவேறு கதைகள் கூறப்படுகின்றன.

நாம் ஆட்சி பீடம் ஏறுவதற்கும், எமது நெருக்கடியான சூழலிலும் ஊடகங்கள் எம்முடன் இருந்தன. ஆனால் இன்று இல்லை என திட்டுகின்றோம். ஊடகங்களுக்கு தெரியாமலேயே ஊடகங்களை நாட்டுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தி கொள்வதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...