நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளந்தம் 1000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், லாஃப்ஸ் எரிவாயு செயலிழந்ததன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவன தலைவர் தெஹார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் லாஃப்ஸ் நிறுவன தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு டொலர் போதியளவு இல்லாததாலும், கடன் பத்திரங்களைத் திறப்பதில் உள்ள தடைகளாலும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் இதுவரை இந் நெருக்கடிக்கான எவ்வித தீர்வினையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.
#SriLankaNews

