நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது எதிர்வரும் 13 ஆம் நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரங்குச் சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளத்தைப் போன்றே மக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment