இந்தியாசெய்திகள்

காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்! திடுக்கிடும் சம்பவம்

8 12 scaled
Share

காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்! திடுக்கிடும் சம்பவம்

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண், திடீரென காதலுடன் உறவை முறித்துக் கொண்டதால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி (38). இவர் தனது கணவர் முருகனுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏ.முருகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் விசாலாட்சி இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி ஏ.முருகனை சந்திக்க விசாலாட்சி சென்றுள்ளார். அங்கு இருவரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏ.முருகன் திடீரென விசாலாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்யை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீப்பற்றியதால் வலியால் அலறித் துடித்த விசாலாட்சியை பொதுமக்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். உடனடியாக அவர் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக விசாலாட்சி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் மூன்று ஆண்டுகால பழக்கத்தை திடீரென முறித்துக் கொண்டதால் ஏ.முருகன் அவரை கொலை செய்துள்ளதாக தெரிய வந்தது.

விசாலாட்சி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.முருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...