பட்ஜெட் குறித்து ஐ.ம.ச எடுத்த முக்கிய முடிவு!

Budget 1

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது.

இன்று 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, முக்கியமான சில திருத்தங்களை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவை ஏற்றுக்கொள்ளாத நிலை இருக்குமானால், எதிராக வாக்களிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளார்.

பட்ஜட் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் விரைவில் தெரியப்படுத்தப்படவுள்ளது.

Exit mobile version