WhatsApp Image 2021 12 10 at 2.01.31 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் என கூறி ஹயஸ் வாகனத்தை திருடிய கில்லாடிகள்!!!

Share

பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும் இடையில் உள்ள சேவீஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி வான் ஒன்நை சேவீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

பின்பு தனது இரண்டாவது வாகனம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்காக சென்றார். இதனால் நேரம் தாமதமானதால் சேவீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

மறுநாள் சென்று வாகனத்தை எடுக்க எண்ணியவரிற்கு மறுநாளான 30 ஆம் திகதி சேவீஸ் நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை யாரோ இருவர் வந்து எடுத்துச் சென்று விட்டனர் என பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர் நேரில் சென்று என்னை தொடர்பு கொண்டு கேட்காது எவ்வாறு ஒப்படைப்பீர்கள் என சேவீஸ் நிலையத்தில் வினாவியதோடு அங்கே இருந்த சீ.சீ.ரி கமராவை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது வாகனத்தை எடுத்துச் சென்றவர் சேவீஸ் நிலையத்தினருடன் தாம் பொலிசார் எனக் கூறியே வாகனத்தை எடுத்துச் சென்றதாக சேவீஸ் நிலையத்தினர் தெரிவித்திருந்தனர்.

இவை தொடர்பில் வாகன உரிமையாளர் மாங்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் பெயரில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேறகோண்டு வந்தனர்.

இருந்தபோதும் உரிமையாளரும் பல முயற்சிகளை மேற்கொண்டு 9 நாட்களின் பின்பு சாவகச்சேரி கல்வயலில் உள்ள வேதவனப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் ஹயஸ் வாகனத்தை உரிமையாளர் மீட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இதேநேரம் வாகன உரிமையாளரின் பகைவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரே ஆள் வைத்து வாகனத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...