கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.”
இவ்வாறு தூய ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எமது நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டமே இது. எனவே, அதனை தோற்கடிக்க வேண்டும். இதற்காக அமைச்சு பதவியை மட்டுமல்ல எதனையும் தியாகம் செய்வதற்கு நாம் தயார்.
அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்கால சந்ததியினர் எம்மை மன்னிக்கமாட்டார்கள்.” – எனவும் கம்மன்பில அறிவித்தார்.
Leave a comment