WhatsApp Image 2021 11 07 at 1.56.12 PM
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு வீழ்வது நிச்சயம்!! – வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல்

Share

” இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07.11.2021) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக – முழுமையாக கிடைக்கவில்லை. சம்பளப் பிரச்சினை ஒருபுறம். மறுபுறத்தில் விலையேற்றம் என்ற தாங்க முடியாத சுமை.

சமையல் எரிவாயு, பால்மா மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இதனால் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர். யார் வேண்டுமானாலும் எப்படியும் பொருட்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி வீழ்வது உறுதி. நல்லதொரு அரசை உருவாக்க மக்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...