கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் தனது மகளிடம் சேட்டை செய்தவரின் அயலவரின் காதை அறுத்து, வெட்டிக் காயப்படுத்திய தந்தை தருமபுரம் பொலிசாஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார்.
வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை நேற்று (28) 12 வயது மதிக்கத்தக்க மகளிடம், குறித்த நபர் சேட்டை புரிந்தமையால், இந்த அதிரடி நடவடிக்கையினை அவர் எடுத்துள்ளார்.
குறித்த நபரின் கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்
கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகிறது.
#SrilankaNews