இராணுவ முகாமை ட்ரோன் கமெரா மூலம் புகைப்படம் எடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி!

Army Camp.jpg

விக்டோரியா நீர்த்தேக்கம் உள்ளிட்ட சில பாதுகாப்பு வலயங்களை அனுமதியின்றி ட்ரோன் கமெரா மூலம் புகைப்படம் எடுத்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்டோரியா நீர்த்தேக்கம், இராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கமெராவால் மூவரும் புகைப்படம் எடுத்தனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமையவே தெல்தெனிய பொலிஸாரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கைதானவர்கள் கொத்தட்டுவ, களணி ஆகிய பகுதிகைளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

#SrilankaNews

Exit mobile version