திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்ட நிலையில் பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனேடிய அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளைக் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே கனடா உள் நுழைவதற்கு அனுமதித்து வருகின்றது.
இந்த நிலையில் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டதுடன், அனைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னரே குறித்த பெண் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும் அவர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பைஸர்-பயோஎன்டெக், மொடர்னா, அஸ்ட்ராஜெனகா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment