சிங்கள சினிமாவின் பிரபல நடிகை விசாகா சிறிவர்தன (65) காலமானார்.
1981 இல் திரையுலகில் நுழைந்தவர்.
இவர் சாரங்கா, சனசன்னா மா, அனுராதா, சசர சேதனா, சுரதுதியோ, சத்தியாக்கிரகனாயா, எஹெலேபொல குமாரிஹாமி மற்றும் சத்யாதேவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன், 1985 இல் வளர்ந்து வரும் நடிகைக்கான சரசவி விருதையும், 1986 இல் சிறந்த நடிப்புக்கான OCIC விருதையும் வென்ற அவர், பல தொலைக்காட்சி நாடக தொடர்களிலும் நடித்துள்ளார்.
இறுதி நிகழ்வுகள் குருணாகலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(24) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment