நளின் பண்டார
செய்திகள்அரசியல்இலங்கை

“ராஜபக்சக்களின் சகாப்தம் உடன் முடிவுக்கு வர வேண்டும்”

Share

“அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம். ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இன்றைய (10) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை மின்சார சபை ஆரம்பத்தில் நட்டமடையும் நிறுவனமாக இருந்ததில்லை. அதுபோல் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நட்டமடையும் நிறுவனமாக இருக்கவில்லை.

எனினும், தற்போது மின்சார சபையை வங்குரோத்து நிலைக்கு அரசு தள்ளியுள்ளது.

விவசாய அறுவடைக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய நீர் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது நடந்து செல்ல முடியும். அரசின் தவறான தீர்மானங்களே நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம்.

எனவே, ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...