ரஷ்யாவின் முதல் இலக்கு நானாகவே இருப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,
எதிரி என்னை தனது முதல் இலக்காகவும், இரண்டாவது இலக்காக எனது குடும்பத்தாரையும் நிர்ணயித்துள்ளான் எனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளான் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் தலைநகரில் காணப்படும் அரச கட்டடத்திலேயே தங்கியுள்ளேன் எனவும், தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் எதிரியின் சதிகார கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
#world