“எமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்தும் சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
” ஒரு முறை அல்ல, இரு தடவைகள் அல்ல – எமது தலைவரை தொடர்ச்சியாக தாக்கி பேசும் செயலில்தான் மஹிந்தானந்த அளுத்கமகே ஈடுபட்டு வருகின்றார். சேறுபூசும் விதத்தில் போலிக்கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.
அவர் சாக்கடையை கிளறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நன்றாகவே கிளறட்டும், அவ்வாறு கிளறும்போதுதான் குப்பைகள் வெளிவரும்.
நாம் அரச பங்காளிகள். அரசை காக்கவே பாடுபடுகின்றோம். சிலவேளை விமர்சனங்களை முன்வைக்கின்றோம். அது ஜனநாயக உரிமை. தாக்குவதாக இருந்தால் எம்மை தாக்குங்கள். எமது தலைமைமீது கைவைக்க வேண்டாம். எம்மால் பொறுமை காக்க முடியாது.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.
#SrilankaNews