நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஒழுங்கு விதிகள் சட்டம் இராணுவ ஆட்சி நோக்கி நாட்டை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் உண்டு.
இவ்வாறு தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில்.
நாட்டில், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால ஒழுங்கு விதிகள், நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்ல வழியமைக்கக் கூடியவை.
காணாமல் போனோர் அலுவலகத்துக்கான நியமனங்கள் இராணுவத்துடன் தொடர்புடையோராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுகிறோம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது உறவுகளைரத் தேடியும் நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,
அண்மையில், வடக்கு மாகாணத்துக்கு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது – என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a comment