மீண்டுமொரு முடக்கம் தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர். இதேவேளை எதிர்வரும் நத்தார் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.
தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் .
அவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் சட்டப்படி தண்டணைக்குரியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைகளை காரணங்காட்டி மக்கள் சுதந்திரமாக நடந்துக்கொள்வதால்,இந்தப் பண்டிகைக் காலத்தில் மீண்டும் ஒரு கொவிட் கொத்தணி உருவாகாமல் இருப்பதற்காக நாம் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment