உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

old man

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சடலம் பொஸிசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சில நாள்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இதன் காரணமாகவே சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version