புத்தளம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரமொன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்றயதினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, சுமார் 120 அடி நீளம் கொண்ட குறித்த இயந்திரம் கடுங்காற்று காரணமாக இலந்தையடி பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரியை நடுக்கடலுக்கு ஏற்றிச் சென்று இறக்குவதற்கே குறித்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.