பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
தொடர் விலையேற்றத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
எனவே, இவ்விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி முக்கிய சில முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் இன்றும் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 1,850 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணமும் 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நாளை வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment