முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றை சுத்தம் செய்தவர்கள் வழங்கியத் தகவலையடுத்து குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடியவையென தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இவற்றை செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Leave a comment