WhatsApp Image 2021 12 11 at 7.10.03 PM
செய்திகள்அரசியல்இலங்கை

இரவோடிரவாக வந்து குந்திய புத்தர் – தாண்டியடியில் சம்பவம்!!

Share

சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான பிக்குகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனையடுத்து பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5மணி முதல் குறித்த இடத்தில் ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் செயற்பாட்டைக்கண்டித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.

குறித்த இடத்தில் இருந்து சிலை அகற்றப்படும் வரை தாம் இங்கிருந்து நகரப்போவதில்லையென தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் பிரசன்னமாகியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...