marrying
செய்திகள்இந்தியா

காதல் திருமணம் செய்தமைக்காக சகோதரியின் தலையைத் துண்டித்து செல்பி எடுத்த சகோதரன்!

Share

காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.

மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும், சிறுவனின் தாயாரும் செல்பி எடுத்துள்ளனர். இந்தநிலையில் பொலிஸார் கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றிவிட்டு, செல்பியை நீக்கிவிட்டு பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

அத்துடன் சிறுவனையும் அவனது தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

கொலையான குறித்த இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறியதுடன், தன்னுடைய காதலனான 20 வயது இளைஞர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர், தன்னுடைய கணவருடன் லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகக் கருதி, அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அப்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். இதன்பின்னரே புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...