அடுத்த ஆண்டு பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் அப்போது, பொது எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்முரண்பாடுகள் காரணமாக தற்போதைய அரசாங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருக்காது என்பதால் அடுத்த ஆண்டு ஒரு அரசியல் திருப்பம் ஏற்படும்.
இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி காலத்தின் தேவை. அடுத்த வருடம் இந்த கூட்டணி வடிவம் பெறும். அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய திறமையான தலைவர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்லர்.
எங்கள் அனைவரதும் பொது எதிரி அரசு. அடுத்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிறர் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள நாம் எம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு இந்த திருப்பத்திற்கு தயாராக வேண்டும். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும்.
விமான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். இலங்கை வழியாக விமானங்கள் பறக்க முடியாது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்.
இதன் விளைவாக டொலர் பிரச்சினை மோசமாகிவிடும். உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் என தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment