இந்தியா மணிப்பூரில், இறுதிச்சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் செயற்பட்டுவரும் குகி என்னும் பயங்கரவாத அமைப்பு, பொதுமக்கள் மற்றும் படையினர் மீது இடையிடையே தாக்குதல்களை நடாத்தி வருகிறது.
இந்நிலையில் குகி அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, மணிப்பூரிலுள்ள ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த 10ஆம் திகதி படையினர் தாக்குதல் நடாத்திய தாக்குதலில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு, அம்மாநிலத்தின் கங்மம் கிராமத்தில் நடைபெற்றது.
இதன்போது அக்கிராம மக்கள் பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், அங்கு வந்த குகி பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கங்மம் கிராம மக்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்துத் தப்பியோடிய பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

