நேற்று (10) பிற்பகல் பயாகல எலகஹவத்த பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை அமைப்பை சீர் செய்யாமையால் இவ்வாறு பல விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
#SrilankaNews