சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்ற தமிழர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2018ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அவர் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விசாரணை முடிவடைந்தவழக்கில் , முனுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Leave a comment