தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நாளைமறுதினம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதுரகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இதன்போது இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படவுள்ளது.
மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews