கனேடிய உயர்ஸ்தானிகருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று நேற்றை தினம் கொழும்பில் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான், உதவியாளர் டானியல் பூட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஒரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பு தமிழ் தரப்பினர் சார்பாக கனடாவுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.
#SriLankaNews