WhatsApp Image 2021 09 05 at 11.28.19 PM
செய்திகள்இலங்கை

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

Share

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஞானசார உன்னிடம் எந்தவித தேச பற்றும் கிடையாது. இந்த நாட்டில் உனக்கு பிரச்சினையாக விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? உனக்கு பலம் இருந்தால் பேசு”

இந்த நாட்டில், ஜனாதிபதி,பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய பெரிய கொள்கலன்களில் போதைபொருள்களை நாட்டுக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு தாராளமாக வழங்குகின்றனர், நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பறந்து கிடக்கிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட அனைத்தையும் வெட்டி அழிக்கிறார்கள், இது சிங்கள தேசம், இந்த சிங்கள தேசத்தில் சாராயக்கடைகள், மதுபானசாலைகள் போன்றவற்றுக்கு பொறுப்பாக
ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் உள்ளார்கள்.

என்னை இவர்கள் கொன்றுபோட்டாலும், நான் எவ்வித பயமும் இல்லது சொல்ல வரும் உண்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வேன் – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஞானசார நீ பெரிய சிங்கம் என நினைத்துக்கொண்டிருக்கிறாய், அவ்வாறு நினைப்பாயானால் நான் உனக்கு சவால் விடுகிறேன், இந்த நாட்டில் மக்கள் உன்ன உணவின்றி இறக்கின்றனர், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசு” எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...