Sajith Premadasa
செய்திகள்அரசியல்இலங்கை

மனுஷ மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குக!

Share

” நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர், சபாநாயகரிடம் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும்.

அதற்கான உத்தரவாதத்தை அவர் இன்னும் வழங்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயற்பட வேண்டும். மனுஷ விவகாரத்தில் தற்போதைய சபாநாயகர் மௌனம் காக்கின்றார்.

மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சபைக்குள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரச வன்முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 17
செய்திகள்உலகம்

ஈரான் போர் ஜூன் வரை நீடித்தால் 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வர்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்போதைய போர்ச்...

05 18
செய்திகள்உலகம்

வெறும் $35,000-ல் ஒரு போர்!: அமெரிக்காவையே திணறடிக்கும் மலிவு விலை ட்ரோன்கள் – போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சி!

நவீன போர்க்களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் பல கோடி...

06 16
செய்திகள்உலகம்

நமது கரையை வந்தடைந்த போர்!: இந்தியப் பெருங்கடல் ஒரு ‘பொருளாதார நெடுஞ்சாலை’ – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘WION World PULSE’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...