சுகாதார பிரிவினர் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்தே குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment