IMG 20211213 120410 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்கானையில் தொடரும் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…!

Share

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானையில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றிரவு பத்து மணியளவில் (12) புகுந்த வாள்வெட்டுக்குழு பொருட்களுக்கு சேதம் விளைவித்து தப்பிச்சென்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழு வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

குறித்த கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியுள்ள போதும் முச்சக்கர வண்டியினை மூடியிருந்த பொலுத்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலுத்தீனை கீழே இழுத்து விழுத்தினர்.

இதனால் முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...