reuters
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரின் சாட்சி

Share

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் வரை, தாக்குதல்கள் தொடர்பில் அப்போதைய பிரதமருக்கோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளுக்கோ, அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கோ உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவலாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு  மேல் நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (29) சாட்சியமளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுக்களின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாணடோ ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்,   அத்தகைய தாக்குதல் தொடர் நடத்தப்படலாமென்ற உறுதியான புலனாய்வு தகவலொன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவை உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவல்களாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும் அவை நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன, புலனாய்வு பிரிவினூடாக கிடைக்கும் தகவல்கள் மீது நம்பிக்கை வைத்து உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை ஆராய்ந்து இவ்வாறான பேரழிவுகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற, பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது அவர் கூறினார்.

நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இஸர்தீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இந்த வழக்கு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஐந்தாவது நாளாகவும் சாட்சி வழங்கியதுடன், தற்போதைய பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவும் சாட்சி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...