கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
கனடா சென்றுள்ள அவர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மற்றும் சாணக்கியன் எம்.பி கலந்து கொண்ட கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சுமந்திரனுக்கு எதிராக கோஷங்களும் முழங்கியுள்ளது.
‘சுமந்திரன் தமிழினத் துரோகி’ என்ற கோஷங்களை எழுப்பிய கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கூட்டத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews