சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்ததாக மாவட்ட பொலிஸ் தலைவர் முகாவியே அஹமது முதே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அல் ஷபாப் இஸ்லாமியவாத போராட்டக் குழுவே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதில் ஏழு கார்கள் மற்றும் மூன்று ரிக்சோ வண்டிகள் சேதமடைந்திருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment