நாட்டில் பரவலாக களிமண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு ஆகிய காரணங்களால் இந்த திடீர் கேள்வி அதிகரித்துள்ளது.
பல வருடங்களாக களிமண் அடுப்புகளுக்கான பாவனை மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் மட்பாண்ட அடுத்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
ஆயினும் தற்போது மட்பாண்ட அடுப்புகளுக்கான திடீர் கேள்வி அதிகரிப்பால், மட்பாண்ட உற்பத்தி தொழில்துறை திடீர் ஏற்றத்தை கண்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் களிமண் அடுப்புக்களை கொள்வனவு செய்வதில் தீவிரம்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment