இலங்கை வருகிறார் சுப்பிரமணிய சுவாமி!

Subramanian Swamy

இந்தியாவின் அரசியல்வாதியும் பொருளாதார நிபுணரும் புள்ளிவிவர நிபுணருமான சுப்பிரமணிய சுவாமி இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவர் கொழும்பு வருகை தரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி எதிர்வரும் நவராத்திரி நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இலங்கை படையின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version